Bond Investment - Top 6 important things to consider in Tamil

 

Bond investment: கடன் பத்திர முதலீடு - கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்!

How to buy bonds

பிக்ஸட் டெபாசிட்டை விட சற்று கூடுதலாக வட்டி விகிதம் கிடைப்பதால் கடன் பத்திரங்கள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

 ரிஸ்க் இல்லாத அதே நேரத்தில் ஒரளவு நல்ல வருமானம் தரக்கூடிய முதலீட்டுகளை முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பி முதலீடு செய்கின்றனர். அந்த வகையில் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது குறித்து பலரும் யோசித்து வருகின்றனர். பிக்ஸட் டெபாசிட்டை விட சற்று கூடுதலாக வட்டி விகிதம் கிடைப்பதால் கடன் பத்திரங்கள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

 ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும் கடன் வளர்ச்சி என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வங்கிகளின் கடன் வளர்ச்சி அதிகரிக்கும் அளவுக்கு, டெபாசிட் வளர்ச்சி இல்லை. இதை அதிகரிக்க வங்கிகளும் தொடர்ந்து டெபாசிட்டுக்கான வட்டியை உயர்த்தி வருகிறது. ஆனால் அது பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை. இதையடுத்து நாட்டின் பொதுத்துறை மற்றும் தனியார் துறை என பல வங்கிகளும் கடன் பத்திரங்கள் எனப்படும் பாண்டுகளை வெளியிட்டு நிதி திரட்டி வருகின்றன.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, தனியார் ஐசிஐசிஐ, ஆக்சிஸ் என பல வங்கிகளும் பாண்டுகளை வெளியிட தொடங்கி உள்ளன.


கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு முன்பு என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டுமென்று நிதிஆலோசகர் ராமலிங்கத்திடம் கேட்டோம். அவர்கள் அதை விளக்கமாக எடுத்து சொன்னார்.

கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகிறது. அதிக வட்டி கிடைக்கிறது அதனால் முதலீடு செய்யலாம் என்று இருக்கக்கூடாது. அந்த முதலீடு பாதுகாப்பான, நம்முடைய முதலீட்டில் உள்ள ரிஸ்க் என்ன என்பது குறித்த அடிப்படை தகவல்களை தெரிந்து வைத்து கொள்வது அவசியம்.


நிதி தேவைப்படும் நிறுவனங்கள் அனைத்தும் உரிய அனுமதி பெற்று கடன் பத்திரங்களை வெளியிடும். கடன் பத்திரங்களுக்கு அதிக வட்டி வழங்குவதற்கான காரணம் என்பது குறித்து முதலில் ஆராய வேண்டும். மேலும் கடன் பத்திரங்களின் மூலம் திரட்டப்படும் நிதி எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதையும், அதன் மூலமாக நிறுவனத்துக்கு போதிய அளவு வருமான கிடைக்குமா என்பதையும் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

வட்டி விகிதம்

கடன் பத்திரங்களில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது வட்டி விகிதம். கடன் பத்திரங்களை வெளியிடும் நிறுவனங்கள் அதற்கான வட்டி விகிதம் எவ்வளவு என்பதை அறிவிக்கும். இப்படி அறிவிக்கப்படும் வட்டி விகிதம், அவர்கள் வழங்கும் கடன் பத்திரத்திலும் அச்சிடப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். கடன் பத்திரத்தில் வட்டி விகிதம் அச்சிடப்படவில்லை, அது குறித்து கேள்வி எழுப்பலாம். வட்டி மாதம் தோறும், காலாண்டுக்கு ஒருமுறை எப்படி வட்டி வழங்கப்படும் என்பது குறித்தும் அந்த பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

சில நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு எப்படி வட்டி தேவையே அப்படி வழங்குகிறது. அதாவது முதலீட்டாளர் மாதம்தோறும் வட்டி தொகை தேவை என நினைத்தல் அப்படியே எடுத்து கொள்ளலாம். அதற்கான வசதிகள் உள்ளன.

 ரேட்டிங்

அடுத்ததாக கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் கடன் பத்திரங்களுக்கான ரேட்டிங் என்ன என்பதை தெரிந்து வைத்து கொள்வது முக்கியம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வெளியிடும் அனைத்து கடன் பத்திரங்களுக்கும் ரேட்டிங் வழங்கப்படுகிறது. ஏஏஏ ரேட்டிங் உள்ள கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது நல்லது. ஏனெனில் இந்த கடன் பத்திரங்கள் குறைந்த அளவு ரிஸ்க் கொண்ட பாண்டுகள் ஆகும்.

ஏஏஏ -வில் தொடங்கி டி வரை பலவகையில் ரேட்டிங் வழங்கப்படுகிறது.

ஏஏஏவில் தொடங்கி டி வரை ரேட்டிங் கொடுக்கப்படுகிறது. இந்த ரேட்டிங் மறுதலுக்கு உட்பட்டது. எனவே தொடர்ந்து நீங்கள் முதலீடு செய்யும் கடன் பத்திரங்களின் ரேட்டிங்கை கவனிக்க வேண்டும். ரேட்டிங் சரிந்திருந்தால் அதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆராய வேண்டும். பாண்ட் ரேட்டிங் குறைந்ததற்கான காரணம் ஏற்று கொள்ளும் படியும், எதிர்காலத்தில் ரேட்டிங் உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பதை ஆராய வேண்டும்.

வருங்காலத்தில் ரேட்டிங் உயருவதற்கு வாய்ப்பு இல்லையெனில் அந்த பாண்டுகளை சந்தைகளில் விற்பனை செய்வது நல்ல முடிவாக இருக்கும்.

கடன் பத்திரத்தில் உள்ள ரிஸ்க்

கடன் பத்திரத்தில் முதலீடு செய்யும் போது, ஒன்றை கவனித்தில் வைத்து கொள்ள வேண்டும். அதாவது கடன் பத்திரம் வெளியீடும் நிறுவனம் திவால் ஆனால் எந்தவிதமான இழப்பீடு கிடைக்காது. அதாவது வங்கி டெபாசிட் செய்யும் போது வங்கி திவால் ஆன பிறகு கூட முதலீட்டாளர்களுக்கு குறிப்பிட்ட அளவு இழப்பீடு கிடைக்கும். அதாவது குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருக்கும்.

 ஆனால் கடன் பத்திர முதலீட்டில் அப்படி எதுவும் இல்லை. சமீபத்தில் யெஸ் பேங்க் கடன் பத்திரத்தில் முதலீடு செய்தவர்களுக்கு எந்தவிதமான இழப்பீடும் கிடைக்கவில்லை.

முதலீட்டு காலம்

கடன் பத்திரத்தின் முதலீட்டு காலம் என்பது ஓராண்டு தொடங்கி சுமார் 10 ஆண்டுகள் வரை என பல்வேறு கால அளவில் உள்ளன. இதைக் கவனித்து முதலீடு செய்வது அவசியம். கடன் பத்திரத்தின் முதிர்வுக் காலத்துக்கு ஏற்பதான் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும். உங்களுக்கு இடையிடையே பணம் தேவைப்பட்டால் பணத்தை வெளியே எடுப்பது சிரமமான ஒன்றாகும். கடன் பத்திரத்தை அதன் முதிர்வுக் காலத்துக்கு முன் உடைத்து எடுக்க அனுமதி இல்லாமல் இருக்கும் அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.

நிறுவனங்கள் திரட்டும் நிதியின் அளவு

கடன் பத்திரங்க மூலம் நிதி திரட்டும் நிறுவனம் எவ்வளவு தொகையை திரட்டுகிறது என்பதை கவனிக்க வேண்டும். அதாவது ரூ.1,000 கோடி திரட்டும் என அறிவித்து விட்டு, முதலீட்டாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தால் சற்று அதிகமான தொகையை திரட்டும்.

அதிக தொகையைத் திரட்டினால் விண்ணப்பித்த அனைவருக்கு கடன் பத்திரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலான கடன் பத்திரத்தின் முக மதிப்பு ரூ.1,000 ஆக இருக்கும், இதில் குறைந்தபட்சம்10 கடன் பத்திரங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். குறைந்தபட்ச முதலீடு ரூ.10,000-ஆக இருக்கும்.

பாண்டு மியூச்சுவல் ஃபண்ட்

பாண்டுகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் இதையெல்லாம் கவனித்து முதலீடு குறித்த முடிவுகள் எடுக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அது கடினம் எனில் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் கடன் பத்திரங்களில் மட்டும் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன. அதில் முதலீடு செய்து எளிதாக லாபத்தை எடுக்கலாம்.

நம்முடைய தேவை என்ன? அதை நிறைவேற்றும் வகையில் இந்த முதலீடு இருக்குமா என்பதை ஆராய் முதலீடு செய்வது நல்லது.

Interested in buying bonds? Contact us : 095144 44118


#NHAIInvIT #InfraBonds #RoadInvestment #NCDs #FixedIncome 
#கடன்பத்திரங்கள்  #ஃபேஸ்வால்யு #நிதிநிறுவனங்கள்  #வரிசேமிக்கும்பத்திரங்கள் #ஜீரோகூப்பன் #மாற்றத்தக்கபத்திரங்கள் #சர்வதேசபத்திரங்கள் #வரிசேம #கடன்பத்திரங்கள் #BondCertificates #பொதுப்பணித்துறை #PublicSector #பெரியநிறுவனபத்திரங்கள் #CorporateBonds #நிதிநிறுவனபத்திரங்கள் #FinancialInstitutions #வரிசேமிக்கும்பத்திரங்கள் #TaxSavingBonds #ஜீரோகூப்பன்பத்திரங்கள் #ZeroCouponBonds #மாற்றப்பட்டபத்திரங்கள் #ConvertibleBonds #சர்வதேசப்பத்திரங்கள் #InternationalBonds #முதிர்வு #Maturity #கூப்பன்தொகை #CouponRate #ஃபேஸ்வால்யு #FaceValue #வட்டித்தொகை #FaceValueofBonds #டிரேடிங் #Trading #நிதிநிறுவனத்துவம் #FinancialManagement #முதலீடு #Investment #சேமிப்பு #Savings #வரிவிலக்கு #TaxExemption #பத்திரம் #Certificate #tamil #english #தமிழ் #buybond #NEXTLEVELTOGETHER #bondsinchennai #bondinvesting  #Bonds #DebtInvestment #InterestPayment #debtinstrument #BondCertificates #PublicSector #CorporateBonds #FinancialInstitutions #TaxSavingBonds #ZeroCouponBonds #ConvertibleBonds #InternationalBonds #Maturity #CouponRate #FaceValue #Trading #FinancialManagement #Investment #Savings #TaxExemption #Certificate #கடன்பத்திரங்கள் #ஃபேஸ்வால்யு #நிதிநிறுவனங்கள் #வரிசேமிக்கும்பத்திரங்க #Buybonds #buybondsinindia #DebtInvestment #InterestPayment #DebtInstrument #buybondsinchennai #buybondsinTamilnadu #GovernmentBonds #CorporateBonds #MunicipalBonds #PSUBonds #TaxSavingBonds #ConvertibleBonds #NCDs #PerpetualBonds #ZeroCouponBonds #StateDevelopmentLoans #InvestingInBonds #ASSETSOLUTION #Assetsolutionsrealty #FixedIncomeInvestments #FinancialPlanning #TaxBenefits #DiversifyPortfolio #IndianFinance #BondsMarket #InvestmentOptions #IncomeInvesting #SafeInvestments #BondInvestments #CorporateBonds #FixedIncome #Investing #FinancialAdvice #WealthManagement #PortfolioDiversification #InvestmentStrategy #SecondaryMarket #RiskManagement #CashFlow #InvestmentPortfolio #LongTermInvesting #FinancialPlanning #AssetAllocation #InvestmentTips #StocksVsBonds #bharatbonds #buyindiabonds #chennai

Comments

Popular posts from this blog

NHAI InvIT Bonds: A New Way to Invest in India’s Road Infrastructure

What is bonds? (In Tamil)

கடன் பத்திரங்கள் என்றால் என்ன..? What is debt instrument? ( Debentures / Bonds) in Tamil