What is bonds? (In Tamil)

கடன் பத்திரங்கள் என்றால் என்ன?




பாண்ட் (Bond) என்பது கடன் பத்திரங்கள் ஆகும். பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசின் பொதுப் பணித்துறை ஆகியவை இந்தக் கடன் பத்திரங்களைப் பொது மக்களிடையே பணம் திரட்டுவதற்காக விற்கின்றன. இதை முதலீட்டாளர்கள் கடன் பாதுகாப்பிற்காக வாங்குகின்றனர். இந்தப் பத்திரங்களை வைத்திருப்போருக்கு அந்தக் காலக்கட்டங்களில் நிறுவனங்கள் அல்லது அரசு வட்டி செலுத்தும். பெரும்பாலும் இந்த வகைப் பத்திரங்களில் ரிஸ்க் ஆதிகம் இருக்காத காரணத்தினால் முதலீட்டாளர்கள் இதனை முதலீட்டுக் காலத்தில் வட்டி பெறவும் வரி விலக்குப் பெறவும் உபயோகிக்கின்றனர்.

இந்தப் பத்திரங்களின் விலை வட்டிக்கு நேர் எதிரானது. அதாவது வட்டி அதிகம் இருப்பின், விலைக் குறைவாகவும், வட்டிக் குறைவாக இருப்பின் விலை அதிகமாகவும் இருக்கும்.

பல்வேறு வகையான பத்திரங்களைப் பற்றி பார்ப்போம்:

1. பொதுப்பணித்துறையின் பத்திரங்கள்: இவை அரசு துறைகள் அல்லது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறைகளின் பத்திரங்கள். பெரும்பாலும் இவை இடைக் கால அல்லது நீண்ட காலப் பத்திரங்களாகவே இருக்கும். இந்தப் பத்திரங்கள் உறுதிமொழி பத்திரங்கள், 5 முதல் 7 ஆண்டுகள் வரை முதிர்வு காலம் இருக்கும்.


2. பெரிய நிறுவனப் பத்திரங்கள்: இவை பெரிய நிறுவனங்கள் தரும் பத்திரங்கள். இந்தப் பத்திரங்களுக்கு அந்த நிறுவனம் குறிப்பிட்ட காலத்திற்கு வட்டித் தரும். முதிர்வு காலத்தில் முதலுடன் சேர்ந்து முதிர்வு கால வட்டியையும் தரும்.

3. நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பத்திரங்கள்: இந்தப் பத்திரங்கள் நிதி நிறுவனங்களும் வங்கிகளும் தருவதால் மிகவும் கட்டுப்பாடுகளுடன் நல்ல திட்டங்கள் கொண்டதாக இருக்கும். பெரும்பாலும் இந்தப் பத்திரங்களை பெரிய அளவிலான முதலீட்டளார்கள் வாங்குவார்கள்.


4. வரி சேமிக்கும் பத்திரங்கள்: வரி விலக்குப் பெறத் தனி நபர்கள் வாங்கும் பத்திரங்கள் இவை. இவற்றின் முக்கிய நோக்கம் வரி விலக்கு மற்றும் நீண்ட காலச் சேமிப்பு.

5. ஜீரோ கூப்பன் பத்திரங்கள்: இந்த வகைப் பத்திரங்களில் கூப்பன் தொகை அதாவது வட்டித் தொகை இருக்காது. ஆனால் நல்ல சலுகை விலையில் விற்கப்படும்.

6. மாற்றத்தக்கப் பத்திரங்கள்: இந்தப் பத்திரங்களை முதலீட்டளார்கள் பங்குகளாக மாற்றிக் கொள்ளலாம், ஆகவே இந்தப் பெயர்.

7. சர்வதேசப் பத்திரங்கள்: இவை வெளிநாட்டுப் பத்திரங்கள். இவை அந்தந்த நாட்டின் கரன்சியில் வழங்கப்படுகிறது. இது ஒரு பெரிய முதலீட்டு வாய்ப்பாகும்.

பத்திரங்களைப் பற்றிமதிப்பு(ஃபேஸ் வால்யு): பத்திரம் முதிர்வின் போது முதலீட்டாளர்களுக்கு நிறுவனம் தரும் தொகையையே ஃபேஸ் வால்யு என்பார்கள். புதிதாக விற்கப்படும் பத்திரங்கள் இந்தத் தொகையிலே விற்கப்படும். இப்படி விற்கும் போது அதை டிரேடிங் அட் பார் (trading at par) என்று கூறுவர். அதே கூடுதல் மதிப்பில் விற்றால் அதைப் பிரீமியம் விலை என்றும் குறைவாக விற்றால் அதை சலுகை விற்பனை என்றும் கூறுவர்.

முதிர்வு தேதி: முதலீட்டாளரின் அசல் தொகைத் திருப்பி வழங்கப்படும் நாள்.

முதிர்வுக்கான காலம்: இது முதிர்வு தேதிக்கும் இன்றைக்கும் உள்ள வித்தியாசம். நாளுக்கு நாள் இந்த வித்தியாசம் குறைந்து கொண்டே இருக்கும்.

கூப்பன் தொகை: பத்திரங்களின் காலத்தில் கொடுக்கப்படும் வட்டியைக் கூப்பன் தொகை என்று கூறுவார்கள். இந்தத் தொகை கொடுக்கப்படும் கால அவகாசத்தைப் பத்திரங்கள் முதலில் கொடுக்கப்படும் போதே நிர்ணயத்துவிடுவார்கள். பெரும்பாலும் இது வருடத்தில் இரு முறையாக இருக்கும். சில பத்திரங்களுக்கு கூப்பன் தொகைக்கு பதிலாக கூப்பன் மதிப்பைப் பத்திர மதிப்பின் சதவீதமாக அளிப்பார்கள். இதைக் கூப்பன் விலை என்று குறிப்பிடுவார்கள். இந்த முறையில் வருடத்தில் வரும் கூப்பன் தொகையைப் "மதிப்பு(ஃபேஸ் வால்யு)" X "கூப்பன் விலை" என்று கணக்கீடு செய்வார்கள். இந்தத் தொகை வருடத்தில் எத்தனைத் தவணைகளோ அதற்கு ஏற்றவாறு கூப்பன் தொகை முதலீட்டாளர்க்குச் செலுத்தப்படும். சேமிக்கப் பல வழிகள், இந்தப் பத்திரங்கள் ரிஸ்க் இல்லாத நிலையான வட்டித் தரும் முதலீடு மற்றும் சேமிக்கும் வழியாகவும் வாய்ப்பாகவும் கருதலாம். என்ன பத்திரம் வாங்கலாமா?

For more Bond tips, Contact us : +91 9514444118

#கடன்பத்திரங்கள்  #ஃபேஸ்வால்யு #நிதிநிறுவனங்கள்  #வரிசேமிக்கும்பத்திரங்கள் #ஜீரோகூப்பன் #மாற்றத்தக்கபத்திரங்கள் #சர்வதேசபத்திரங்கள் #வரிசேம #கடன்பத்திரங்கள் #BondCertificates #பொதுப்பணித்துறை #PublicSector #பெரியநிறுவனபத்திரங்கள் #CorporateBonds #நிதிநிறுவனபத்திரங்கள் #FinancialInstitutions #வரிசேமிக்கும்பத்திரங்கள் #TaxSavingBonds #ஜீரோகூப்பன்பத்திரங்கள் #ZeroCouponBonds #மாற்றப்பட்டபத்திரங்கள் #ConvertibleBonds #சர்வதேசப்பத்திரங்கள் #InternationalBonds #முதிர்வு #Maturity #கூப்பன்தொகை #CouponRate #ஃபேஸ்வால்யு #FaceValue #வட்டித்தொகை #FaceValueofBonds #டிரேடிங் #Trading #நிதிநிறுவனத்துவம் #FinancialManagement #முதலீடு #Investment #சேமிப்பு #Savings #வரிவிலக்கு #TaxExemption #பத்திரம் #Certificate #tamil #english #தமிழ் #buybonds

Comments

Popular posts from this blog

NHAI InvIT Bonds: A New Way to Invest in India’s Road Infrastructure

கடன் பத்திரங்கள் என்றால் என்ன..? What is debt instrument? ( Debentures / Bonds) in Tamil